I.N.D.I.A கூட்டணி பெயருக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Published : Aug 11, 2023, 03:27 PM IST
I.N.D.I.A கூட்டணி பெயருக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

சுருக்கம்

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என்று வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A - Indian National Developmental Inclusive Alliance - இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியா எனும் இந்த பெயர் சுருக்கத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. இதுபோன்ற வழக்குகளை தேர்தல் ஆணையத்தின் முன் வைக்க வேண்டும் என்றும், அதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விளம்பர நோக்கத்துக்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில் தனக்கு விளம்பரம் வேண்டுமென்றால் ஊடக நிறுவனங்களுக்கு நேர்காணல்களை வழங்கியிருப்பேன் என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

சொந்த நாட்டு மக்கள் மீது இந்திரா காந்தி வெடிகுண்டு வீசியதை நியாயப்படுத்தலாமா? அகிலேஷ் மிஸ்ரா கேள்வி!

இந்தியா எனும் பெயரைப் பயன்படுத்துவது ஒழுக்கத்திற்கு எதிரானது என்ற மனுதாரர் கோரிக்கைக்கு பதிலளித்த நீதிபதி எஸ்.கே.கவுல், ‘அரசியலில் நாங்கள் ஒழுக்கத்தை தீர்மானிக்கப் போவதில்லை’ என்றார். மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார். 

ஆனால், ‘இதற்காக மக்கள் நேரத்தை வீணடிப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த மனுவை விசாரிக்க முடியாது. இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளதால் தலையிட முடியாது’ எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, மனுவை வாபஸ் பெற விரும்புவதாக மனுதார் தெரிவித்தார். அதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னதாக, இந்தியா எனும் இந்த பெயர் சுருக்கத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இதுபோன்று பல வழக்குகள் உள்ளன. அவர்கள் பதிலளிக்கட்டும். நாங்கள் அதை நிச்சயமாக பரிசீலிப்போம் என கூறி, 26 எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையம், மத்திய அரசு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo: இனி எந்த விமானமும் தாமதம் இல்லை..! கண்ட்ரோல் ரூமில் நின்று கண்காணிக்கும் மத்திய அமைச்சர்
வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!