போபால் விஷவாயு கசிவுக்கு கூடுதல் இழப்பீடு கேட்பது ஏன்?: உச்ச நீதிமன்றம் கேள்வி

By SG Balan  |  First Published Jan 11, 2023, 6:25 PM IST

1984ஆம் ஆண்டு போபால் விஷவாயு கசிவு விபத்துக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


1984ஆம் ஆண்டு நிகழ்ந்த போபாலில் மீத்தைல் ஐசோ சயனேட் விஷவாயுக் கசிவு விபத்தில் 5,68,292  பேர் பாதிக்கப்பட்டனர். 5,295 பேருக்கு மேல் உயிரிழந்தனர். மேலும் 5,478 பேர் குணப்படுத்த முடியாத உடல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர்.

இந்த விபத்துக்குக் காரணமாக இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைட் நிறுவனம் 47 கோடி அமெரிக்க டாலர் இழப்பீட்டைக் கொடுத்தது. 1989ஆம் ஆண்டு வழங்கப்பட்டபோது இதன் மதிப்பு 715 கோடி ரூபாயாக இருந்தது.

Tap to resize

Latest Videos

1989ஆம் ஆண்டு அளிக்கப்பட்டதே இறுதியான தொகை என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் மத்திய அரசு தரப்பில் கூடுதலாக 7,400 கோடி ரூபாய் இழப்பீடு கோரப்பட்டது. இதனை அந்த நிறுவனம் வழங்க மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Joshimath interim relief: ஜோஷிமத் நிலச்சரிவு - 1.5 லட்சம் இழப்பீடு, மாதம் ரூ.4000 நிதி உதவி அறிவிப்பு

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை சஞ்சை கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, அபை ஓக்கா, விக்ரம் நாத், ஜே. கே. மகேஷ்வரி ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதித்துறை மறுவிசாரணைக்கு ஜனரஞ்சகவாதம் அடிப்படையாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தனது அதிகார வரம்புக்குள் மட்டுமே செயல்பட முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், ஏற்கெனவே வழங்கப்பட்ட இழப்பீட்டில் 50 கோடி ரூபாய் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில் மீண்டும் இழப்பீடு கோருவது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது: பிரதமர் மோடி நம்பிக்கை

இதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, இது ஒரு அசாதரணமான வழக்கு. இழப்பீடு வழங்கப்பட்ட காலத்தில் விஷவாயுக் கசிசு மூலம் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதத்தை மறுத்த யூனியன் கார்பைட் நிறுவன வழக்கறிஞர், ஹரிஷ் சால்வே, வழங்கப்பட்ட இழப்பீடுத் தொகை போதுமானதுதான் என்றும் அரசின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் வலியிறுத்தினார். வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட உடனே மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாமல், 19 ஆண்டுகள் கழித்து இப்போது மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

World's longest river cruise: கங்கா விகாஸ் கப்பலில் ஒரு ஜாலியான பயணம்! நீங்க ரெடியா!

click me!