"நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம்...!" – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 
Published : Jun 12, 2017, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
"நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம்...!" – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சுருக்கம்

supreme court orders to release NEET results

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத்தடை விதித்திருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்பு படிக்க மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு என்ற புதிய தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாணவர்கள் தரப்பில் போராட்டம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் என பல தடுப்பு ஏற்படுகளை மேற்கொண்டனர்.  ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.

இந்த நீட் தேர்வின் போது பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கபட்டன. மேலும் பலத்த பரிசோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே வினாத்தாளை கொண்டு தேர்வுமுறை நடத்தப்படவில்லை எனவும் மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகின்றனர்.

மேலும் தற்போது நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிய வினாத்தாளை கொண்டு நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று ஒரு சிலரும், வேறு சிலர் தமிழகத்தில் நீட் தீர்வே இருக்ககூடாது எனவும் தெரிவித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட 4 வாரம் தடை விதித்து மே 24 ல் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 13 க்கு பிறகு வெளியிடப்படும் எனுவும் நீதிமன்ற தடையால் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை எனவும் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் 12லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை மாநில உயர் நீதிமன்றங்கள் நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!