
குற்றப்பின்னணி கொண்ட மற்றும் தண்டனை பெற்ற எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடையிடக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் குற்றப்பின்னணி கொண்ட எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
குற்றப்பின்னணி கொண்டவர்கள், சிறை தண்டனை அனுபவித்தவர்கள், வழக்கை சந்திப்பவர்கள் என அனைவரின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது