இந்திரா காந்தியிடம் இருந்து நிர்மலா சீதாராமன் பாடம் கற்க வேண்டும்..! காங்கிரஸ் தலைவர் ஃப்ரீ அட்வைஸ்..!

First Published Oct 31, 2017, 4:15 PM IST
Highlights
defence minister nirmala should learn from indira gandhi


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாகிஸ்தானைக் கையாளும் முறையை மறைந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாயக் தெரிவித்துள்ளார்.

கோவாவில் கொண்டாடப்பட்ட இந்திரா காந்தியின் 33-வது நினைவுநாள் விழாவில் பேசிய சாந்தாராம், நிர்மலா சீதாராமன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து நிர்மலா சீதாராமன் கற்றுக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானை இந்திரா காந்தி கையாண்ட வலிமையான முறையை கற்றுக்கொண்டு அதேபோல் நிர்மலா சீதாராமனும் செயல்பட வேண்டும். அதைவிடுத்து மோடி விரும்புவதைப் போன்று நிர்மலா, வெறுமனே பொம்மையைப் போல இருக்கக்கூடாது.

ஒவ்வொரு வாரமும் நிகழும் இந்திய வீரர்களின் மரணத்தைப் பற்றி பிரதமரோ பாதுகாப்புத்துறை அமைச்சரோ கவலைப்பட்டதாகவே தெரியவில்லை என சாந்தாராம் நாயக் தெரிவித்தார்.
 

click me!