இந்திராகாந்தி 33-வது நினைவுதினம்; ‘சக்தி ஸ்தலத்தில்’ ராகுல், மன்மோகன், பிரணாப் அஞ்சலி

First Published Oct 31, 2017, 3:27 PM IST
Highlights
Rahul Gandhi leads tributes to Indira Gandhi on her death anniversary


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி, அவரின் நினைவிடத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசு தலைவர்பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

முதல் பெண் பிரதமர்

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி, நாட்டின் முதலாவது, ஒரே பெண் பிரதமர் எனும் பெருமையைப் பெற்றவர். கடந்த 1917ம் ஆண்டு, நவம்பர் 19-ந்தேதி பிறந்த இந்திரா காந்தி, 1966 முதல் 1977ம் ஆண்டுவரை பிரதமராகவும், அதன்பின் 1980ம் ஜனவரிமுதல் அவர் இறக்கும்வரை பிரதமராக இருந்தார்.

சுட்டுக்கொலை
இந்நிலையில், அமிர்தசரஸில் பொற்கோயிலில் பஞ்சாப் தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் ‘ஆப்ரேஷன் புளூ ஸ்டார்’ எனும் அதிரடி நடவடிக்கையை எடுக்க இந்திரா காந்தி உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக அடுத்த சிலமாதங்களில் இந்திரா காந்தி அவரின் மெய்காப்பாளர் ஒருவரால் கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31-ந்ேததிசுட்டுக்கொல்லப்பட்டார்.

33-வது நினைவுநாள்

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு 33-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘சக்தி ஸ்தலத்தில் மலர் தூவி ராகுல் காந்தி, முன்னாள்பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மோடி அஞ்சலி

இந்திரா காந்தி நினைவையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று எனது அஞ்சலியையும், மரியாதையையும் தெரிவிக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ்

மேலும், காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வௌியிட்டுள்ள செய்தியில், “ சக்திவாய்ந்த தலைவர், இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர், ஆயிரத்தில் ஒருவர் இந்திரா காந்தி. வீரமரணம் சிலவற்றோடு முடிந்துவிடுவதில்லை. இது தொடக்கம். இந்திரா காந்தியையும்,நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அவர் செய்த தியாகத்தையும், செயலையும் நினைவு கூர்வோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!