உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு...

First Published Aug 8, 2017, 6:47 PM IST
Highlights
supreme court new judge in deepakmishra...


உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஒடிசாவை சேர்ந்த தீபக் மிஸ்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கெஹர் உள்ளார். இவரது பதவி காலம் வரும் 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் புதிய தலைமை நீதிபதியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில் ஜெ.எஸ்.கெஹர் பதவி காலம் நிறைவடைவதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் 45 வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைப்பார். தீபக் மிஸ்ராவின் பதவி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடையும்.

click me!