‘ரூபாய் நோட்டு தடை’ குறித்து நாடாளுமன்றக் குழு அறிக்கை தாக்கல்...

First Published Aug 8, 2017, 6:32 PM IST
Highlights
old currency matter parliament group statement


ரூபாய் நோட்டு தடை குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மழைக்காலக் கூட்டத் தொடர் முடியும் முன் இந்த விவகாரம் அவையில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

அந்த அறிக்கை குறித்த விவரங்களை கண்டறிந்து டெஹல்கா.காம் இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது-

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை என்பது மிகப் பெரிய தவறாகும். இந்த நடவடிக்கை எதற்காக கொண்டு எடுக்கப்பட்டதோ அதில் ஒன்று கூட நிறைவேறவில்லை.

இந்த நடவடிக்கையால் எந்தவிதமான கருப்பு பணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதை நிதி அமைச்சகமே ஒப்புக் கொண்டுள்ளது. ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால் சந்தேகத்துக்கு இடமான வகையில் ரூ.4 ஆயிரத்து 172 கோடி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது என்று நிதி அமைச்சகமே தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையால் ரூ. 5 முதல் 7 லட்சம் கோடி கண்டுபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

ரூபாய் நோட்டு தடையால் தீவிரவாதிகளுக்கு நிதி செல்வது தடுக்கப்படுவதில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பணமில்லா சமூகம் அல்லது பணம் குறைந்த சமூகம் உருவாக்கப்படவில்லை. இப்போது மீண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 8ந் தேதிக்கு பிந்தைய காலத்துக்கு வந்துவிட்டனர். அதாவது, மீண்டும் பணத்தையே அதிகமாக பயன்படுத்துகிறார்கள், டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறவில்லை.

ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால் , சிறு மற்றும் குறுந்தொழில்கள்,அமைப்புசாரா துறைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பா.ஜனதாவின் தொழில் சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம இது குறித்து விடுத்த அறிக்கையில் கூட, “ ரூபாய் நோட்டு தடையால், 3  லட்சத்துக்கும் மேலாக தொழிற்சாலைகள் முடங்கியது, 4கோடி மக்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்’’ எனத் தெரிவித்துள்ளது.

எந்த விதமான திட்டமிடல், முன்யோசனை இன்றி இந்த மிகப்பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏ.டி.எம்.களுக்க ஏற்றார்போல் கரன்சிகளைவடிவமைக்கவில்லை, ரூ.2000 நோட்டு கொண்டு வரும் போது, அதற்கு சில்லரை மாற்ற சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இல்லை.

வங்கிக்கும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் தேவைக்கு ஏற்றார்போல் போதுமான அளவு பணம் அளிக்கப்படவில்லை. நாளுக்கு நாள் புதிய புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டு மக்கள் குழப்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். கிராமப்புறங்களில் நீண்ட நாட்களாக ஏ.டி.எம்.கள் பணமில்லாமல் இருந்தது.

ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால்  அரசின் திட்டமிட்ட செலவுகள் குறைக்கப்பட்டன. சுகாதாரம், கல்வி மற்றும் முக்கியத்துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறுபக்கம் திருப்பப்பட்டது. இதில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு, கட்டணம் உயர்த்தப்பட்டது, நிதியுதவி நிறுத்தப்பட்டது, ஆய்வுகளுக்காக ஒதுக்கப்படும் இடங்கள் குறைக்கப்பட்டன. வரிகள் உயர்த்தப்பட்டன, பென்ஷன் திட்டங்களுக்கான வட்டி, சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்பட்டது.

இந்த திட்டமிட்டு ெசய்யப்பட்ட தவறுக்கு யார் பொறுப்பு ஏற்பது?. ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேலான நிதி, விளம்பரம், போக்குவரத்து, உள்ளிட்ட பல செலவுகளுக்குசெலவிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடையால் பலியான 180 பேரின் உயிருக்கு யார் பொறுப்பு ஏற்பது? போன்ற கேள்விகளை கேட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!