
எலக்ஷன்ல ஓட்டு போடலையா? அரசை விமர்சனம் செய்யும் உரிமை கிடையாது..உச்சநீதிமன்றம் அதிரடி!
தேர்தலில் ஓட்டு போடாவிட்டால் அரசை விமர்சிக்கும் உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, 'இந்தியாவின் குரல்' என்ற அரசு சாரா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது..இந்த வழக்கு தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசியல் தலைவர்களின் பேனர்களை அகற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அப்போது 'இந்தியாவின் குரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்,தனேஷ் லேஷ்தானிடம் விசாரணை நடத்திய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு, நீங்கள் தேர்தலில் வாக்களித்தீர்களா எனக்கேள்வி எழுப்பியது.
அதற்கு அவர் இல்லை என்று கூறியதும் வாக்களிக்காத ஒருவருக்கு விமர்சிக்கும் உரிமையும் கிடையாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.இப்பிரச்சினையை குறித்து உயர்நீதிமன்றத்தில் புகார் மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.