உ.பி. தேர்தலுக்கு பின் ‘முத்தலாக்’ முறைக்கு தடை ?

 
Published : Feb 05, 2017, 05:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
உ.பி. தேர்தலுக்கு பின் ‘முத்தலாக்’ முறைக்கு தடை ?

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபின், முஸ்லிம்களின் ‘முத்தலாக்’ முறையை தடை செய்வது குறித்து அரசு மிகப்பெரிய முக்கிய முடிவு எடுக்கும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் மத்தியஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத் காசியாபாத் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பு அளிக்கப்படாத பாரம்பரிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நடைமுறை தடை செய்யப்பட வேண்டியது அவசியம். உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின், முத்தலாக் முறையை தடை செய்வது குறித்து மத்திய ரசு மிகப்பெரிய முக்கிய முடிவு எடுக்கும்.

சமூகத்துக்கு கேடு விளைக்கும் நடைமுறையை தடைசெய்ய மத்திய அரசுக்கு கடமை இருக்கிறது. இந்த விசயத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறுவோம். இந்த விவகாரம் மதம்சார்ந்த விசயம் இல்லை, பெண்களின் மரியாதையும், தன்மானம் தொடர்பான விசயமாகும்.

மத்திய அரசு, மக்களின் நம்பிக்கைகளுக்கும், வழிபாடுகளுக்கும் மதிப்பு அளிக்கிறது. அதேசமயம், சமூக கேடுகள் அழிக்கப்பட வேண்டும். பெண்களை மதிக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும்தான். வேறு எந்த கட்சியிலும் பெண்களுக்கு சிறந்த பதவிகளும், இடங்களும் கிடையாது, மதிப்பும் கிடையாது . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!
அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்!