
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், ரூ. 500, ரூ.1000 நோட்டுகளாக ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் வங்கியில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்ய இருக்கிறது.
ரூபாய் தடை
நாட்டில் கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என கடந்த நவம்பர் 8-ந்தேதி செல்லாது என அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, கருப்பு பணத்ைத ஒழிக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறையினர், அமலாக்கப்பிரிவினர் முடுக்கி விடப்பட்டனர். கடந்த 3 மாத காலத்தில் கருப்புபணம் பதுக்கியவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம், தங்க நகைகள், அசையை சொத்துக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ஆய்வு
மேலும், கணக்கில் வராத பணத்தை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தவர்கள், தங்கள் வருமானத்துக்கும் வங்கி டெபாசிட்டுக்கும் தொடர்பில்லாமல் பணம் வைத்து இருப்பவர்கள் உள்ளிட்ட பலரை வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.
ரூ. 5 லட்சத்துக்கு மேல்
இதில் முதல்கட்டமாக ரூ. 5 லட்சத்துக்கு அதிமாக வங்கியில் டெபாசிட் செய்த 18 லட்சம் பேருக்கு வருமான வரித்துறையினர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த 18 லட்சம் பேர் கணக்கில் ரூ. 4.2 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்ததாக வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நிலுவை தொகை
வருமான வரித்துறையினர் தரப்பில் கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடையின் போது, செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் கடன்கள், நிலுவை தொகைகளை செலுத்தியவர்கள் பட்டியலை எடுத்து வருகிறோம். அடுத்த 18 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்குள் அனைத்து விவரங்களையும் பெற்று விடுவோம். அரசு அறிவித்துள்ள இந்த வசதியை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், நேர்மையானவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள். ஒட்டுமொத்தமாக ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் மூலம் ரூ.10 லட்சம் கோடி டெபாசிட் கணக்கில் வராமல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறோம். அனைத்தையும் ஆய்வு செய்ய இருககிறோம்.
1.09 கோடி வங்கிக்கணக்கு
ரூபாய் நோட்டு தடை காலத்தில் ரூ. 2லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை 1.09 கோடி வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் சராசரி ரூ. 5.03 லட்சமாகும். மேலும், 1.48 லட்சம் வங்கிக்கணக்குகளில் ரூ. 80 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் சராசரியா ரூ. 3.31 கோடியாகும். இவை அணைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளன'' எனத் ெதரிவித்தார்.