மோடியிடம் அடிமையாகிவிட்டது தேர்தல் ஆணையம் – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

First Published Feb 5, 2017, 5:48 PM IST
Highlights


தேர்தல் ஆணையம் மோடியிடம், அடிமையாகிவிட்டது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் என கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நேற்று நடந்தது. ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் நேற்று வாக்குஙபபதிவு நடைபெற்றது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்குச்சாவடிகளில் நேரடியாக தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு மக்களிடம் வாக்கு சேகரித்ததை வெளிப்படையாக பார்க்க முடிந்தது.

இதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆனால் இவை எதுவும் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் படவில்லையா? மற்ற கட்சியினர் இதுபோல் தேர்தல் விதிமுறைகளை மீறியிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா?

தேர்தல் ஆணையத்திற்கு முதுகெலும்பு இல்லையா. இதுபோல் அத்துமீறி வாக்குச்சாவடி மையத்தில் நுழைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவினரை தேர்தல் அதிகாரிகளோ, பாதுகாப்பு படையினரோ ஏன் தடுக்கவில்லை? தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியிடம், அடிமையாகிவிட்டது என்பதை இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் முறைகேடு இருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்தது. தணிக்கை  அறிக்கையை ஆய்வு செய்தபோது, நன்கொடை தொகையில் ரூ.27 கோடி முரணாகவும்,  தவறாகவும் இருப்பதாக தெரிவித்தது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என தேர்தல் கமி‌ஷனுக்கு வருமான வரித்துறை பரிந்துரை செய்துள்ளது. 
ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மோடி துடிக்கிறார். அவர்  வெட்கம் கெட்ட சர்வாதிகாரி. மோசமான, அசிங்கமான தந்திரத்தை கையாள்கிறார்.  கோவா, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க மோசமான தோல்வியை தழுவும். ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய துடிக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

click me!