Arvind Kejriwal : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்... உச்சநீதிமன்றம் அதிரடி

By Ajmal Khan  |  First Published May 10, 2024, 2:30 PM IST

மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச்நீதிமன்றம் ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  


கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறை

டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனை எதிரத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில் விசாரணையின் போது  யூகங்கள் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் இல்லை என்றும் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.  . இந்த வழக்கில் சாட்சிகள் தனக்கு எதிராக முதலில் எதுவும் சொல்லவில்லை என்றும் ஆனால் திடீரென அவர்கள் மாற்றி கூறுவதாகவும் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே ஜாமின் வழங்க வேண்டும் என கேட்டக் கொள்ளப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

Latest Videos

undefined

இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம்

இதனையடுத்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கலாமே என  தெரிவித்த நீதிபதிகள் தேர்தல் சமயம் என்பதால் இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலிக்கிறோம் என்று தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி  உத்தரவிடப்பட்டது.. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் ஆம் ஆத்மி தொண்டர்களும் உற்சாகமாக இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

click me!