மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவை தேர்தலில் பிரச்சாரத்தில் மே மாதம், அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஜூன் 2ம் தேதி சரணடைந்தார். இந்த சூழலில் இந்த வழக்கில் கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் செப்டம்பர் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் பிணையத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
undefined
இந்த வழக்குப்பற்றி பகிரங்கமாக பொதுவெளியில் எந்த கருத்தும் பேசக்கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் அனைத்து விசாரணைகளுக்கும் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்தனர். நீண்டகாலமாக சிறையில் இருப்பது நியாயமற்ற வகையில் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதன் மூலம் டெல்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு அவர் விடுதலையாக உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதியின் கே. கவிதா ஆகியோருக்குப் பிறகு இந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியேறும் நான்காவது உயர்மட்டத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.
SEMICON India 2024 | செமிகண்டக்டர் துறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற்ற இந்தியா!
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கூட்டணிக் கட்சியான காங்கிரஸை எதிர்கொள்ள ஆம் ஆத்மி தயாராகி வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை அக்கட்சியினருக்கு ஊக்கமளிக்கும். ஊக்கமளிக்கும்.
2021-22 ஆம் ஆண்டுக்கான டெல்லி அரசின் கலால் கொள்கையை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் இந்த கொள்கை இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை (ஈடி) கலால் கொள்கை 'மோசடி' தொடர்பான தனி பணமோசடி வழக்கையும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.