BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.. தமிழக அரசு மனு தள்ளுபடி..!

Published : Apr 11, 2023, 10:55 AM ISTUpdated : Apr 11, 2023, 11:07 AM IST
BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.. தமிழக அரசு மனு தள்ளுபடி..!

சுருக்கம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்க வேண்டும்.  இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!