ஒரே நாளில் 5,676 பேருக்கு கொரோனா பாதிப்பு..! அச்சத்தில் பொதுமக்கள்- அதிர்ச்சியில் மத்திய அரசு

By Ajmal Khan  |  First Published Apr 11, 2023, 10:30 AM IST

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5676 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதிகரிக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் இரண்டு ஆண்டுகள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். அப்போது தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் கொரோனாவின் ருத்ரதாண்டவத்திற்கு பலி கொடுக்க நேரிட்டது. இந்தநிலையில் தற்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால் மீண்டும் பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நாடு முழுவதும் தலை தூக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் 1000க்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Latest Videos

இபிஎஸ்- ஓபிஎஸ் மனு மீதான வழக்கில் இருந்து அதிரடியாக விலகிய நீதிபதி.! என்ன காரணம் தெரியுமா.?

ஒரே நாளில் 5600பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 37ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 12 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 5ஆயிரம் பேருக்கும், டெல்லியில் 3900 பேருக்கும் கொரோனா தினந்தோறும் உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 386 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அச்சம் தேவையில்லை

தற்போது 2,099 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தநிலையில் மத்திய அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றும் இன்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, ஆகிசிஜன் வசதி மற்றும் மருந்துகள் போன்றவை தொடர்பாக ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டாலும் உயிரிழப்பு என்பது குறைவாக பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் பெரிய அளவில் அச்சம் அடைய தேவையில்லையென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

மாம்பழம் சின்னத்தை இழந்த பாமக..! மாநில கட்சி அந்தஸ்து பறிப்பு- அதிர்ச்சியில் ராமதாஸ்

click me!