அரசியல் கட்சிகள் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

 
Published : Apr 08, 2017, 06:19 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
அரசியல் கட்சிகள் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

சுருக்கம்

supreme court condemns political parties

அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ந்து காகிதங்களாக இருக்கின்றன. அவை நிறைவேற்றப்படுவதில்லை. அரசியல் கட்சிகள் மக்களுக்கு விசுவாசமாக நடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் வலியுறுத்தினார்.

கருத்தரங்கம்

டெல்லியில் தேர்தல் விஷயங்கள் தொடர்பான பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் நேற்று கருத்தரங்கள் நடந்தது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூத்த நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாக்குறுதிகள் காகிதங்கள்

இந்த கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் பேசுகையில், “ இப்போதுள்ள காலத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதங்களாக மாறிவிட்டன.

மனசாட்சியின்றி

அரசியல் கட்சிகள் மிகவும் அசட்டுத் துணிச்சலுடன்  தாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போனதற்கு மக்களிடம் மனசாட்சியின்றி, நியாயப்படுத்தி காரணங்களைக் கூறி மன்னிப்பு கோருகின்றன.

விசுவாச இருங்கள்

மக்களின் ஞாபக மறதியை  கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் காகிதங்களாகவே மாறிவிட்டன. அரசியல் கட்சிகள் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும்.

குறப்பிடவில்லை

கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகத்தில் கடைநிலையில் இருக்கும் மக்களுக்கும் சமூக பொருளாதார நீதி கிடைப்பதை உறுதி செய்ய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது குறித்தும், தேர்தல் சீர்திருத்தம் ஆகியவற்றுக்கான தொடர்பு குறித்து யாரும் குறிப்பிடவில்லை.

 தேர்தலில் மக்களுக்கு இலவசங்கள் அளிப்பதை ஒழுங்குபடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டது. அதன்படி, தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டது’’ என்று தெரிவித்தார்.

 புனிதமான நாள்

நீதிபதி தீபக் மிஸ்ரா பேசுகையில், “ தேர்தல் நேரத்தில் மக்களின் வாங்கும் திறனுக்கு வாய்ப்பில்லை. தேர்தலில் போட்டியிடும் நபர், தேர்தல் என்பது முதலீடு செய்யும் இடம் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் வாக்குகளை நீதிக்கு உட்பட்டும், மனசாட்சிக்கு மதிப்பளித்தும் அளிக்க வேண்டும். போட்டியிடும் நபர்கள் அளிக்கும் சலுகைகளை மனதில் வைத்து அளிக்க கூடாது.

மக்கள் ஒப்பது மனசாட்சிக்கு பயந்து, உணர்வுகளுக்கு ஆட்படாமல் வாக்களிக்கிறார்களோ அன்றுதான் ஜனநாயகத்துக்கு புனிதமான நாள்’’ என்று தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்