
கோடிகணக்கில் கொள்ளையடித்தவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு திரிகின்றனர். ஆனால் ஒருவர் 5 சேலையை திருடியதற்கு ஒரு வருடம் சிறையில் அடைப்பதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த எலியா என்பவரை 5 சேலைகள் திருடியதாக ஆந்திர பிரதேச போலீசார் ஒரு வருடத்திற்கு முன்பு அவரை கைது செய்து விசாரணையின்றி காவலில் வைத்துள்ளனர்.
இதை எதிர்த்து எலியாவின் மனைவி உச்சநீதி மன்றத்தை நாடினார். இதுகுறித்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் கோடிகணக்கில் கொள்ளையடித்துவிட்டு ஏமாற்றியவர்களை விட்டுவிடுங்கள், சேலை திருடியவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையா என போலீசாரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல் பல்வேறு வியாபாரிகள் சேலைகள் திருட்டு போகிறது என புகார் அளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கபட்டாதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 8 ஆம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.