"பணம் போட கட்டணம் வசூலிக்க கூடாது" - ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு

 
Published : Mar 07, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
"பணம் போட கட்டணம் வசூலிக்க கூடாது" -  ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு

சுருக்கம்

4 times in the last 3 days ago Private Bank to take more money

கடந்த 3 நாட்களுக்கு முன் தனியார் வங்கியில் 4 முறைக்கு அதிகமாக பணம் எடுத்தாலும், பணம் டெபாசிட் செய்தாலும் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.

வணிகர்கள், வியாபாரிகள், தொழிலாளிகள் உள்பட ஏராளமானோர் தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் போட்டு வைக்கின்றனர். இவர்கள் பணம் எப்போதும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நேரத்தில் பாரத ஸ்டேட் வங்கியும் கூடுதலாக பணம் செலுத்தினாலும், தங்களது கணக்கில் இருந்து எடுத்தாலும், ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் குறைந்த பட்ச டெபாசிட் வைத்து கொள்ள சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதில், பெரு நகரங்களில் உள்ள மக்கள் தங்களது வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில், நகர்ப்புற மக்கள் ரூ.3 ஆயிரம், புறநகர் மக்கள் ரூ.2 ஆயிரம்,  கிராம மக்கள் ரூ.1000 கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள சுமார் 31 கோடி பேர், கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் இந்த திடீர் அறிவிவ்வை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் கொண்டு வர திட்டமிட்டுள்ள இந்த புதிய நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!