
மத்திய அரசு அண்மையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. மாற்றம் செய்யப்பட்ட மரபணு பயிர்களால் பல்வேறு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதுபோன்ற பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள், விற்பனை செய்வதற்கும், பயிரிடுவதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தற்போது மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள், எந்தவித பரிசோதனையும் இல்லாமல், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளை பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். தாக்வர், வரும் 17 ஆம் தேதி வரை, மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளை விற்பனைச் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை பயிரிடவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.