விமான நிலைய உணவகத்துக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் : அதிக விலைக்கு பொருட்களை விற்றதால் நடிகை ஆதங்கம்!

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 12:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
விமான நிலைய உணவகத்துக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் : அதிக விலைக்கு  பொருட்களை விற்றதால் நடிகை ஆதங்கம்!

சுருக்கம்

திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு பிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ சென்றிருந்தார். அவருடன் அவரது தோழி ஒருவரும் சென்றார். அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பப்ஸ் சாப்பிட்டு காபி குடித்தனர்.

அதற்கான பில் வந்த போது பணம் கொடுப்பதற்காக அதை பார்த்த நடிகை அனுஸ்ரீ அதிர்ச்சி அடைந்தார். காரணம் 2 சிக்கன் பப்சின் விலை ரூ.500, காபி ரூ.100, பால் இல்லாத காபி ரூ.80 என்று ரூ.680-க்கு பில் வந்திருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை, இது குறித்து அந்த உணவகத்தில் உள்ளவர்களிடம் கேட்ட போது, யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. மேலும், அந்த உணவகத்தில் உள்ள உணவுகளின் விலை பட்டியலும் அங்கு வைக்கப்படவில்லை.

அவர் தான் தோழியுடன் பப்ஸ் சாப்பிட்டதற்கான விலை பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இது இணையத்தில் வைரலாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த செபின் என்பவர் இந்த ரசீதை பார்த்து, மனித உரிமை ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

இதை அடுத்து, விமான நிலைய இயக்குநர், உணவக மேலாளர், நுகர்வோர் துறை செயலாளர் ஆகியோர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!
ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம்! ரசித்த மற்றொரு பெண்.. CEO செய்த கொடூரம்