மீண்டும் சீக்கியர் கலவர வழக்கு... தூசி தட்டி எடுத்த உயர்நீதிமன்றம்

Asianet News Tamil  
Published : Mar 29, 2017, 03:54 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
மீண்டும் சீக்கியர் கலவர வழக்கு... தூசி தட்டி எடுத்த உயர்நீதிமன்றம்

சுருக்கம்

supreme court again took the sikhs riot case

சீக்கியர் கலவரம் தொடர்புடைய 5 வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

அமிர்தசரஸ் பொற்கோயில் மீதான ராணுவத் தாக்குதலை அடுத்து 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சீக்கிய பாதுகாவலரால் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 3296 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா முழுவதும் 35, 535 பேர் படுகாயமடைந்தனர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக பதவி செய்யப்பட்ட 5 வழக்குகள் போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி கடந்த 1986 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த சூழலில் முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்ட அந்த 5 வழக்குகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அடேங்கப்பா! ரூ.400 கோடியா? மங்காத்தா பட பாணியில் சம்பவம்.. இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளை இதுதான்
உலகமே வியக்கப்போகும் இந்தியா... ஜனவரி 27-ல் வரும் மங்கள நாள்..! வயிற்றெரிச்சலில் டிரம்ப்..!