வானில் இடைமறித்து தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை - இந்தியா வெற்றிகர பரிசோதனை

 
Published : Dec 28, 2017, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
வானில் இடைமறித்து தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை - இந்தியா வெற்றிகர பரிசோதனை

சுருக்கம்

Supersonic missile to intercept the sky

எதிரி நாடுகளின் ஏவுகனைகளை வானிலேயே இடைமறித்து அழித்து தாக்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய ராணுவம்  வெற்றிகரமாக ஒடிசா மாநிலத்தில் நேற்று பரிசோதனை செய்து பார்த்தது.

இந்திய ராணுவத்தின் மேம்பட்ட வான் பாதுகாப்பு(ஏ.ஏ.டி.) மையத்தின் சார்பில் இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. வானில் மிக்குறைவாக 30 கி.லோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று எதிரி நாடுகளின் ஏவுகணைகளை இந்த ஏவுகமை அழிக்கும் திறனுடையது.

இதற்கு முன் இந்த ஆண்டில் பிப்ரவரி 11, மார்ச் 1ந்தேதி ஆகிய 2 முறை பிரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில், நேற்று ஒடிசா மாநிலம், பாலாசூர் அருகே, அப்துல்கலாம் தீவில் நேற்று மீண்டும் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.

இது குறித்து மத்திய பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், “ பாதுகாப்பு ஆய்வு மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இடைமறித்து தாக்கும் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்தது. பிரிதிவி ஏவுகணை இலக்காக வைத்து சோதனை செய்யப்பட்ட நிலையில், அந்த இலக்கை சூப்பர் சோனிக் ஏவுகணை சரியாக தாக்கியது.

இந்த ஏவுகணை 7.5 மீட்டர் நீளமும், திட எரிபொருளாலும், ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்திலும், கணினியால் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தக்கூடியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!