தங்கமகள் சேமிப்பு உள்ளிட்ட பல சிறு சேமிப்புகளுக்கு வட்டி திடீர் குறைப்பு - மத்திய அரசின் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி

 
Published : Dec 28, 2017, 05:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
தங்கமகள் சேமிப்பு உள்ளிட்ட பல சிறு சேமிப்புகளுக்கு வட்டி திடீர் குறைப்பு - மத்திய அரசின் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி

சுருக்கம்

The central government has reduced interest rates for small savings up to 20 cents.

கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எஸ்.சி.), பி.பி.எப்., தங்க மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்புகளுக்கான வட்டியை 20 காசுகள் வரை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேசமயம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படவில்லை.

2018ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலாண்டுக்கான சிறுசேமிப்புகளுக்கான வட்டி வீதங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அது குறித்து பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டங்கள் தவிர, இதர சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டிவீதம் 20 புள்ளிகள்(20காசு) குறைக்கப்பட்டு, வட்டி வீதத்தை 4 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, மூத்த குடிமக்களின் 5 ஆண்டு சிறு சேமிப்பு திட்டத்துக்கு கடந்த காலாண்டு வழங்கப்பட்ட 8.3 சதவீதம் வட்டியே தொடர்ந்து  இருக்கும்.

2017 அக்டோபர் முதல்டிசம்பர் வரை பி.பி.எப். திட்டத்துக்கு வட்டி வீதம் 7.8 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், அது 7.6 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான சேமிப்பு பத்திரத்துக்கும் வட்டி 7.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டி வீதம் 7.8 சதவீதம் இருந்த நிலையில் அது 7.6 சதவீதமாகவும்,  பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான செல்வ மகள் சிறுசேமிப்பு என்று அழைக்கப்படும் ‘சுகன்யா சம்ரிதி’ திட்டத்துக்கு வட்டி வீதம் 8.3 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு வட்டி வீதம் 7.1 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், ஒன்று முதல் 5 ஆண்டுகள்வரை டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி 6.6 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து, மாதந்தோறும் வருவாய் கிடைக்கும் திட்டத்துக்கு வட்டி 7.5 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!