இப்படி ஒரு நிலவை நாம் இனி  பார்க்கமுடியுமா?  150 வருஷத்துக்கு பிறகு தெரியும் சூப்பர்மூன் !! மறக்காம பாருங்க ….

Asianet News Tamil  
Published : Jan 05, 2018, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
இப்படி ஒரு நிலவை நாம் இனி  பார்க்கமுடியுமா?  150 வருஷத்துக்கு பிறகு தெரியும் சூப்பர்மூன் !! மறக்காம பாருங்க ….

சுருக்கம்

super Moon after 150 years

150 ஆண்டுகளுக்குப் பிறகு புளூ சூப்பர் மூன் சந்திர கிரகணம் வரும் 31 ஆம் தேதி வானில் தோன்றும் என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நமது வாழ்நாளில் காணக்கிடைக்காத இந்த சந்திர கிரகணத்தை அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரும் 31ஆம் தேதி, ப்ளூ சூப்பர்மேன் சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. இது நடப்பாண்டின் முதல் கிரகணம் ஆகும்.அதுமட்டுமல்லாமல் 150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப் போகிறது. இந்த நிகழ்வின் போது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டிருக்கும்.

அப்போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படும். இதனால் மற்ற நேரங்களை விட, சந்திரன் மிகப் பெரிதாக காணப்படும். இச்த சந்திர கிரகணம் மொத்தம் 77 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பசுபிக் பெருங்கடலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கிரகணம் மத்திய மற்றும் கிழக்காசிய நாடுகள்,  இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மாலை நேரத்தில் தெரியும்.

இதற்கு முன்பு  கடந்த 1886ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!
விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?