15,000 பேருக்கு இலவசமாக பிரசவம் பார்த்த நரசம்மா பாட்டி காலமானார்...!

Published : Dec 26, 2018, 11:07 AM IST
15,000 பேருக்கு இலவசமாக பிரசவம் பார்த்த நரசம்மா பாட்டி காலமானார்...!

சுருக்கம்

கிராமப்பறங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்த மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நரசம்மா நேற்று உயிரிழந்தார்.

கிராமப்பறங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்த மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நரசம்மா நேற்று உயிரிழந்தார். 

கர்நாடக மாநிலம் கூமகூரு மாவட்டம் கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் நரசம்மா(98). இவர் மருத்துவம் படிக்காவிட்டாலும் தனது அனுபவத்தின் அடிப்படையில் கிராமப்புறங்களில் கடந்த 70 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார். 

இதற்கு அவர் கட்டணம் எதுவும் பெற்றது இல்லை. இதனால் அவர் சுலாகிட்டி நரசம்மா என்று கர்நாடக மக்களால் அழைக்கப்பட்டார். சுலாகிட்டி என்ற கன்னட வார்த்தைக்கு மருந்துவச்சி என்று பொருள். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதேபோல் பல்வேறு  விருதுகளை அவர் பெற்றுள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயது மூப்பு காரணமாக சூலகித்தி நரசம்மாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்ற பகல் 3 மணியளவில் உயிரிழந்தார். நரசம்மாவின் உடலுக்கு அவரது சொந்த ஊரில் இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. நரசம்மாவுக்கு 12 குழந்தைகள் அதில் 4 மகன்கள் இறந்துவிட்டனர். 22 பேரக்குழந்தைகள் உள்ளனர்.  அவரது மறைவுக்கு கர்நாடக  முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!