இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் ஆகிறார் சுக்விந்தர் சிங் சுகு.. காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

By Raghupati RFirst Published Dec 10, 2022, 5:50 PM IST
Highlights

இமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் 5க்கும் மேற்பட்டோர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12ல் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 76 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக 25 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க.. புயலில் இருந்து சென்னை மீண்டாச்சு.. மக்கள் திருப்தியாக இருக்கின்றனர் - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

இந்த நிலையில் ஆப்பிள் தேசமான இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.  இமாச்சல பிரதேச காங்கிரஸில் முக்கிய தலைகள் பலரும் முதல்வர் பதவியை எதிர்நோக்கி கல்வீச தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங் அங்கு செல்வாக்குமிக்க தலைவர் ஆவார்.

அவரது மனைவி பிரதீபா சிங், எம்.பியாக உள்ளார். அவர் இந்த தேர்தலில் போட்டியிடாத போதும் முதல்வர் யார் என்ற பட்டியலில் அவரது பெயரும் அடிபடுகிறது. ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான வீரபத்ர சிங் கோஷ்டிக்கு எதிரான சுக்விந்தர் சுகு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மேலிடம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது என்றும், மற்ற தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இன்று இரவுக்குள் சுகுவின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க.. மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.. தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்!

click me!