கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண செலவு எவ்வளவு? விவரத்தை வெளியிட்டது மத்திய அரசு!!

By Narendran SFirst Published Dec 9, 2022, 6:10 PM IST
Highlights

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் அதற்கு ஆன செலவுகள் குறித்த கேள்விக்கு ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் அதற்கு ஆன செலவுகள் குறித்த கேள்விக்கு ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதுக்குறித்து ராஜ்யசபாவில் மத்திய அரசு சார்பில் பேசிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் நோக்கம் வெளிநாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதும், பிராந்திய மற்றும் உலக அளவில் இந்தியாவின் ஈடுபாட்டை மேம்படுத்துவதும் ஆகும். இத்தகைய வருகைகள் இந்தியா தனது தேசிய நலனுக்கு சேவை செய்வதற்கும் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை செயல்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான வழிமுறையாகும்.

இதையும் படிங்க: யூடியூப் ஆபாச விளம்பரம்: இழப்பீடு கோரியவருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்

இந்தப் பயணங்கள், உயர் மட்டத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கிடையே பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் இந்தியாவின் புரிதலை மேம்படுத்தியுள்ளன. இந்தப் பயணங்களின் போது எட்டப்பட்ட புரிந்துணர்வுகள், அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தவும், இந்தியாவின் பார்வையை முன்வைக்கவும், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை மாற்றம், நாடுகடந்த குற்றம், பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கவும் இந்தியாவுக்கு உதவியது என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் குறித்த விவரங்களைக் கேட்ட சிபிஐ(எம்) எம்பி எளமரம் கரீமின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு பதில் அளித்தது.

இதையும் படிங்க: இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார்? இவர்களின் யாருக்கு வாய்ப்பு?

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள்:

அதில், ஜி20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி சமீபத்தில் இந்தோனேஷியா சென்றதற்கான செலவு ரூ.32,09,760. மேலும், செப்டம்பர் 26 முதல் 28 வரை பிரதமரின் ஜப்பான் பயணத்திற்கான செலவு ரூ.23,86,536 ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் ஐரோப்பா பயணத்துக்கான செலவு 2,15,61,304 ரூபாய். இதற்கிடையில், 2019 செப்டம்பர் 21 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் பிரதமரின் அமெரிக்கப் பயணத்துக்கு ரூ.23,27,09,000 செலவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!