
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் பயிற்சியின் போது மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலம் தேஜ்பூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் 30 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
தரையில் இருந்து மேல் எழும்பிய 30 ஆவது நிமிடத்தில் ரேடார் சிக்னலில் இருந்து விமானம் திடீரென மாயமானது.
பதற்றமடைந்த விமான கண்காணிப்பாளர்கள் விமானத்தை பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மாயமான விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை.
விமானம் ரேடார் சிக்னலில் இருந்து மறைந்த பகுதியை கண்டுபிடித்த அதிகாரிகள் அங்கிருந்து போர் விமானத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.