
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி புதிதாக தொடர்ந்த அவதூறு வழக்கில் விளக்கம் கேட்டு கெஜ்ரிவாலுக்கு உயர் நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
கிரிக்கெட் சங்க முறைகேடு
டெல்லி மாநில கிரிக்கெட் சங்கத்தில் அருண் ஜெட்லி கடந்த 2000ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளைச் செய்தார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், அவரின் கட்சித் தலைவர்கள் பலர் கடந்த ஆண்டு குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் எழுதினர்.
ரூ.10 கோடி
இதையடுத்து, கெஜ்ரிவால், மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் ராகவ் சந்தா, குமார்விஸ்வாஸ், அசுடோஷ், சஞ்சய் சிங், தீபக் பாஜ்பாய் ஆகிய 6 பேர் மீதும் ரூ.10 கோடி கேட்டு மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கடந்த ஆண்டு தொடர்ந்தார்.
குறுக்கு விசாரணை
இந்த வழக்கின் குறுக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் 15 மற்றும் 17 ந்தேதிகளில் நடந்தது. இதில் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜத் மலானி நேரில் ஆஜராகி வாதாடினார். நீதிமன்றத்தில் நிதி அமைச்சர்ஜெட்லி நேரில் ஆஜராகினார்.
கண்டனம்
அப்போது அருண்ஜெட்லியை சர்ச்சைக்குரிய வார்த்தைக்(கிரிமினல்) கூறி ராம்ஜெத் மலானி பேசினார். இதற்கு நீதிமன்றத்திலேயே ஜெட்லியும் அவரின் வழக்கறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
புதிய அவதூறுவழக்கு
அந்த குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய வார்த்தையை நீதிமன்றத்தில் அனைவரின் முன்பு பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கெஜ்ரிவாலுக்கு எதிராக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நேற்றுமுன்தினம் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ப்பட்டது.
நோட்டீஸ்
இந்நிலையில், அந்த அவதூறு வழக்கில் உங்கள் மீது ஏன் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க கூடாது என்று முதல்வர் கெஜ்ரிவாலிடம் விளக்கம் கேட்டு நீதிமன்ற இணைபதிவாளர் பங்கஜ் குப்தா நேற்று நோட்டீஸ் அனுப்பினார். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 26-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் விளக்கத்தை அளிக்க கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.