உத்தர்கண்டில் திடீர் வெள்ளப்பெருக்கு... 150 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்...!

By vinoth kumarFirst Published Feb 7, 2021, 3:01 PM IST
Highlights

உத்தராகண்ட் சமோலியில் திடீர் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தராகண்ட் சமோலியில் திடீர் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ரெய்னியில் உள்ள நந்தாதேவி பனிப்பாறை வெடித்ததாக தெரிகிறது. பனிப்பாறை வெடித்ததால் தாவ்லி கங்கை ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், அருகிலுள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் கரையோர வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹரித்வார், ரிஷிகேஷிலும் நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், பலர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சீறி பாய்ந்த வெள்ளப்பெருக்கால் நீர் மின் திட்டத்திற்கான அணை சேதமடைந்துள்ளது. நிலைமையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 

உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்தரகாண்ட் விரைந்துள்ளனர்.

click me!