முத்தலாக் வழக்கில் திடீர் திருப்பம் - அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

Asianet News Tamil  
Published : Mar 30, 2017, 03:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
முத்தலாக் வழக்கில் திடீர் திருப்பம் - அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

சுருக்கம்

sudden change in talaq case

முத்தலாக் விவாகரத்து வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவரே இவ்வழக்கின் மூல காரணம். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தனது கணவர் செல்போன் மூலம் ஒரே மூச்சில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்து விட்டதாகவும், இதனை உச்சநீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். 

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும் முத்தலாக் முறை இஸ்லாமிய பெண்களின் உரிமையை பறிப்பதாகக் கூறி  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  ஆனால் இதனை ஏற்காத இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தின.

இஸ்லாமியர்களின் தனிச்சட்டத்தில் அரசு தலையிடுவதாக பரவான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!