
கடந்த 2 வாரத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில், தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளும், கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொது செயலாளர் வைகோ, திமுக எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, மாநிலங்களவை துணை சபா நாயகர் தம்பிதுரை உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும், பிரதிநிதிகளும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, இன்று மாலை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேச இருக்கிறார். அப்போது, விவசாய கடன், நதிநீர் பிரச்சனை, கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் அணை கட்டுவதை தடத்து நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்படும் என கூறப்படுகிறது.