
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோயிலையும் பாபர்மசூதியையும் கட்டத் தயார் என்று பா.ஜ.க.மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, அயோத்தியில் ராமர்கோயிலையும், மசூதியையும் கட்டத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.ஆனால் ஆற்றங்கரைக்கு மறுபுறத்தில் தான் மசூதி கட்டப்படும் என்றார்.
இதனைக் கேட்ட தலைமை நீதிபதி கேஹர், இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ளும்படி அறிவுரை கூறினார். வேண்டுமானால் மத்யஸ்ம் பேசவும் தயார் என்று நீதிபதி தெரிவித்தார்.