துணை ஜனாதிபதியாக வெங்கய்யா நாயுடு...? - பாஜக தலைவர்கள் பரிசீலனை

First Published May 19, 2017, 1:13 PM IST
Highlights
sub president is vengaiah naidu by bjp parties leaders consulting


விரைவில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவி காலம் முடிவு பெறுகிறது. இதையொட்டி ஜனாதிபதிக்கான தேர்தல் வேட்பாளர்களை காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோரது பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது.

துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவின் பெயரை பரிந்துரைக்க, பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அணுகி வருகிறது.

தற்போது தமிழகத்தில் அதிமுகவின் இரு அணியை இணைப்பதில் பாஜக பெரும் பங்கு வகிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று மாலை அதிமுகவின் இரு அணியினரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் தங்கமணி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!