விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை - மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்!!

 
Published : May 19, 2017, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை - மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்!!

சுருக்கம்

delhi HC notice to maran borthers in aircel maxis case

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து அமலாக்கப்பிரிவு செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்ககோரி மாறான் சகோதரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது தொழிலதிபர் சிவசங்கரனைமிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ்உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லிசிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதிமாறன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு புனைய முகாந்திரம் இல்லை எனக் கூறி இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த 2-ம் தேதி மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவில், “ ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் செய்த சட்டவிரோத செயல்கள், நடவடிக்கைகளை விசாரணை நீதிமன்றம் தீவிரமாக ஆய்வு செய்வதில் இருந்து தவறிவிட்டது. கலாநிதி மாறன், தயாநிதி மாறன் நிறுவனங்கள் குழுமம் செய்த சட்டவிரோத செயல்களை நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லை. இந்த வழக்கில் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நீதிமன்றம்மதிப்பிட தவறிவிட்டது ஆதலால் இவர்களை விடுவித்தது சரியல்ல’’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அமலாக்கப்பிரிவு ேமல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், தொழிலதிபர்கலாநிதிமாறன், அவரின் மனைவி காவேரி கலாநிதி, சவுத் ஏசியா எபி.எம்.லிமிட்டட்(எஸ்.ஏ.எப்.எல்.), அதன் மேலாண் இயக்குநர் கே சண்முகம், சன் டைரக்ட்டிவி பிவிட் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்கள்,  அடுத்த 4 வாரங்களுக்குள் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும் என்று கூறி நீதிபதி எஸ்.பி. கார்க்  உத்தரவிட்டார். 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!