
ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் படித்த டாப்-20 சதவீத மாணவர்களும் ஐஐடி(IIT) மற்றும் என்ஐடி(NIT) கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மேலும் 12ம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெறாத மாணவர்களும் ஜேஇஇ(JEE Advanced) அட்வான்ஸ் தேர்வு எழுதலாம் என்று மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடு எது? இந்திய Passport நிலை என்ன?
ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சலுகைகாட்ட வேண்டும் என்று தொடர்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கையின் அடிப்படடையில், இந்த முடிவை அமைச்சகம் எடுத்துள்ளதா. இதன்படி, எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும் ஜேஇஇ தேர்வு எழுத குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் தேவையில்லை. இது ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் டாப்-20 சதவீத மாணவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் “ டாப்-20 சதவீதத்தில் வரும் மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்கள் இல்லாமல் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இனிமேல் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதலாம்.
இது தொடர்பாக பலமுறை விவாதங்கள் நடந்தன. பல கல்வி வாரியங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டாப்-20 சதவீதம் மாணவர்கள் 75 சதவீதத்துக்கு கீழாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் அல்லது 350க்கு கீழ் பெற்றுள்ளனர். இதையடுத்து மத்திய அமைச்சகம் எடுத்த முடிவின்படி அதிக மதிப்பெண்களில் டாப்-20 சதவீதத்தில் இருந்தாலே ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றுவிடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
எந்தப் பொருளாதாரச் சவால்களையும் இந்தியா சிறப்பாக சமாளிக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்
ஜேஇஇ-மெயின் தேர்வுக்கான முன்பதிவு 12ம்தேதி(நாளை) முடிகிறது. தேர்வு வரும் 24, 31ம் தேதிகளில் நடக்கிறது.
ஜேஇஇ மெயின் 2023 தகவல் அறிக்கையில் குறிப்பிடுகையில் “ என்ஐடி, ஐஐடி மற்றும் சிஎப்டி கல்வி நிறுவனங்களில், பிஇ, பிடெக், பிஆர்க், பிபிளானிங் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், மத்திய இட ஒதுக்கீடு வாரியம் மூலம் அகில இந்திய தரவரிசையின் சேர்க்கப்படுவார்கள்.
அவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். பட்டியலினத்தவர்கள், 12ம்வகுப்பு தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்எஸ்எஸ் பயிற்சியில் ராகுல் காந்தி பங்கேற்க வேண்டும்: பாஜக அழைப்பு
ஜேஇஇ மெயின்ஸ் தேர்வை இந்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத தயாராகி இருப்பதால்,தேர்வை ஒத்திவைப்பது சரியல்ல என நீதிபதிகள் எஸ்வி கானபுர்வாலா, சந்தீப் மர்னே தெரிவித்தனர்