Earthquake: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..! தலைநகர் டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வைரலாகும் வீடியோ!

By Raghupati RFirst Published Jan 24, 2023, 2:59 PM IST
Highlights

தலைநகர் டெல்லியின் சுற்றுவட்டார பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று மதியம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி - என்சிஆர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய புவியியல் மையத்தின்படி, நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இருந்தது தெரிய வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Viral: நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற! இதெல்லாம் நமக்கு தேவையா கோபி !!

பிற்பகல் 2:28 மணியளவில் நேபாளத்தின் மையப்பகுதியுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகருக்கு கிழக்கே 148 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி - என்.சி.ஆரில் நிலநடுக்கம் குறைந்தது 15 வினாடிகள் நீடித்தது.

மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது. சரியாக நிலநடுக்கம் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஏற்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி, ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதேபோல, ஜனவரி 1 ஆம் தேதி, டெல்லி - என்சிஆர் பகுதியில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 1:19 மணியளவில் ஹரியானாவின் ஜஜ்ஜாரின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

में भूकंप के तेज झटके, 5.8 मापी गई तीव्रता, नेपाल रहा केंद्र pic.twitter.com/Mv8NSlaHRV

— Abhishek Pareek (@abhishe99003648)

நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நிலநடுக்கம் குறித்த தங்கள் அனுபவத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். நிலநடுக்கம் ஏற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை !!

click me!