புதுவையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபாதை வியாபாரிகள் போராட்டம்

By Dinesh TGFirst Published Oct 6, 2022, 4:52 PM IST
Highlights

புதுச்சேரியில் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபாதை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

புதுச்சேரியில் வெளிநாட்டவர், சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அங்கு அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளைக் காட்டிலும் நடைபாதை வியாபரம் மிகவும் பிரபலமாக இருக்கும். அதன்படி நடைபாதை வியாபாரிகள் பலர் காய்கறி, பழம், ஆடைகள் உள்ளிட்டவற்றை நடைபாதைகளில் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் சி.ஐ.டி.யூ. தலைவர் பிரபுராஜ் தலைமையில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்து மத அடையாளங்களை மறைக்க முயற்சிக்க வேண்டாம்; தமிழிசை கோரிக்கை

பண்டிகை காலங்களில் இதுபோல நடைபாதை கடைகளை அகற்றினால் அவர்களது வாழ்வாதாரம் என்ன ஆகும் என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வலியுறுத்தினர். இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறை அலுவலகம் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியே தாங்கள் செயல்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து ஏராளமான சாலையோர வியாபாரிகள் பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அங்கு மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தினால் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி...! தாய்க்கு ஷூ லேஸ் மாட்டி விட்ட ராகுல்.. வைரலாகும் வீடியோ
 

click me!