
10-க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்ற WP7161 அக்பர் என்ற பெயர் கொண்ட ரயிலின் எஞ்சின். மொகலாய பேரரசர் அக்பரின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட பாரம்பரிய பொக்கிஷங்களில் ஒன்றான இது பழைய நீராவி ரயில் எஞ்சின்களில் ஒன்று. சுமார் 65 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் எஞ்சின். இன்றளவும் இயங்கி வந்த சிறப்புக்குரிய இந்த ரயில் எஞ்சின்தான் இன்று விபத்துக்கு உள்ளானது.
ஹரியானா மாநிலம் ரேவாரி அருகே சென்று கொண்டிருந்தபோது, இஞ்சினின் பிரேக் லிவரை நகர்த்த முடியாததால் வேறு வழியின்றி அப்படியே விட்டுவிட, ரயில் எஞ்சின் திடீர் என தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த இஞ்சினில் அப்போது பணியில் இருந்த ஓட்டுநர்கள் 2 பேர் அதில் இருந்து கிழே குதித்து உயிர் தப்பினர். அதன் பின்னர் இந்த ரயில் இஞ்சின் சுமார் 2 கி.மீ தொலைவு வரை சென்று நின்றுவிட்டது. இந்த இஞ்சினுடன் ரயில் பயணிகள் பெட்டிகள் ஏதும் அப்போது இணைக்கப்படவில்லை என்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதே போல், அதே வழித்தடத்தில் வேறு ரயில்கள் ஏதும் எதிரில் வரவில்லை என்பதாலும் பெரிய அசம்பாவிதம் ஏதும் நேரவில்லை.
சிட்டான்ஜான் லோகோமோட்டிவ் வெர்க்ஸ்ஸில் கட்டப்பட்டது இந்த ரயில் இஞ்சின்.