பெண் பெயரில் ஃபேஸ்புக் தொடங்கி, அதே பெண்ணின் போட்டோவை ஆபாசமாக மாப் செய்து போட்ட வாலிபர்... வலைவீசித் தேடும் சைபர் கிரைம்!

 
Published : Jun 06, 2018, 12:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
பெண் பெயரில் ஃபேஸ்புக் தொடங்கி, அதே பெண்ணின் போட்டோவை ஆபாசமாக மாப் செய்து போட்ட வாலிபர்... வலைவீசித் தேடும் சைபர்  கிரைம்!

சுருக்கம்

Started a Facebook account in the name of the teenager and uploaded porn news

இளம்பெண்ணின் பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி, அதில் அப்பெண்ணின் படங்களை பதிவேற்றம் செய்து விலைமாது என்று குறிப்பிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

காந்திவலியை சேர்ந்த 21 பெண்ணிற்கு பேஸ்புக்கில் ஒருகணக்கு இருக்கிறது. அதில் அதிக அளவில் படங்களை பதிவேற்றம் செய்திருந்தார். ஆனால் அப்படங்களை பதிவிறக்கம் செய்ய எந்த விதகட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை .இதையடுத்து மர்மநபர் ஒருவர் இதிலிருந்து அதிக அளவில் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அதனைக் கொண்டு அந்தப் பெண்ணின் பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கினார்.

அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் புகைப்படங்களை பதிவேற்றம்(upload) செய்து அதனை ஆபாச இணையதளங்களுடன் லிங்க் செய்து அதில் ஆபாச செய்திகளையும் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த செய்தியில் அந்த பெண் ஒரு “விலை மாது” என்றும் குறிப்பிட்டு இருந்தார். 

இதனை சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்ப நண்பர் ஒருவர் பார்த்து அப்பெண்ணிடம் உனக்கு இரண்டு பேஸ்புக் கணக்கு இருக்கிறதா? என்று கேட்டார். அப்பெண் இல்லை என்று கூறியதையடுத்து அந்த நபர் பார்த்த பேஸ்புக் கணக்கு லிங்க்கை அப்பெண்ணிற்கு அனுப்பினார்.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது நண்பர்கள் உதவியுடன் உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்செயலில் ஈடுபட்டது யார்? என இன்னும் அந்தப் பெண்ணிற்கு தெரியவில்லை. சைபர் பிரிவு போலீசாரின் துணையோடு அதனை யார் பதிவேற்றம் செய்தது என விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தூக்கத்தில் மலம் கழித்த 3 வயது குழந்தை கொலை.. தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்!
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல..! மோகன் பகவத் நெகிழ்ச்சி பேச்சு!