பழங்குடி மக்களின் கல்வியறிவு 47 %- லிருந்து 59 சதவீதமாக அதிகரிப்பு

By Pothy RajFirst Published Aug 8, 2022, 4:48 PM IST
Highlights

நாட்டில் பழங்குடி மக்களின் கல்வியறிவு சதவீதம் 2001ம் ஆண்டில் 47.1 சதவீதமாக இருந்த நிலையில் 2011ம் ஆண்டில் இது 59 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது.

நாட்டில் பழங்குடி மக்களின் கல்வியறிவு சதவீதம் 2001ம் ஆண்டில் 47.1 சதவீதமாக இருந்த நிலையில் 2011ம் ஆண்டில் இது 59 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது.

நாட்டில் உள்ள மக்கள் தொகையில் பழங்குடியினர் மட்டும் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10.44 கோடி பேர் உள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.6 சதவீதமும், கிராமப்புறம மக்கள் தொகையில் 11.3 சதவீதம் பேர் பழங்குடி மக்கள் உள்ளனர். 

மின்சார சட்டத்திருத்த மசோதா அறிமுகம்: மக்களவையில் காரசார வாக்குவாதம்

5.25 கோடி ஆண்டுகளும், 5.20 கோடி பெண்களும் உள்ளனர். 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2011ம் ஆண்டில் பெண்களின் எண்ணிக்கை, வளர்ச்சி 25%அதிகரித்துள்ளது. ஆண்கள் எண்ணிக்கை 23% அதிகரித்துள்ளது.

 

1000 ஆண்களுக்க 990 பெண்கள் உள்ளனர். தேசிய பாலின கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள்தான் உள்ளனர். 

கேரளா, அருணாச்சலப்பிரதேசம், கோவா, ஒடிசா, சத்தீஸ்கரில் பழங்குடி மக்களின் பாலினம் அதிகமாகும். 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பழங்குடி மக்களின் கல்வியறிவு 2001ல் 47.1 சதவீதமாகவும், 2011ல் 59 சவீதமாகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்துக்கும், பழங்குடி மக்களின் கல்வியறிவு சதவீதத்துக்கும் இடையே 14 சதவீத புள்ளிகள் வேறுபாடு உள்ளது.

மின்சார சட்டத்திருத்த மசோதவை ஏன் 27 லட்சம் பொறியாளர்கள் எதிர்க்கிறார்கள்?

தமிழகம், ஒடிசா, மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்களின் கல்விக்கும், தேசிய கல்வி அறிவு சதவீதத்துக்கும் இடையே 18 புள்ளிகள் வேறுபாடு உள்ளது. 

click me!