
இலங்கையில் நேற்று தீபாவளி திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், இலங்கை தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். பிரதமர் மாளிகையில் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
இலங்கையில் பல ஆண்டுகளாக தமிழர்கள் சித்திரவதைப்பட்டு வந்தனர். தற்போது, பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே, அதிபராக மைத்ரிபால சிறிசேன ஆகியோர் பதவியேற்ற பின்னர், தமிழர்களின் பிரச்சனைகளை சீரமைப்பதாக தெரிவித்தனர். இதையொட்டி இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினர்.
இந்நிலையில் நேற்று இலங்கையில் தீபாவளி திருவிழா கொண்டாடப்பட்டது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
பிரதமரின் மாளிகையில் அரசு சார்பில் தேசிய தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரா.சம்பந்தன், இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.