ஹைதராபாத்தில் இந்தியா-சீனா பேச்சுவாா்த்தை!

 
Published : Oct 30, 2016, 11:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
ஹைதராபாத்தில் இந்தியா-சீனா பேச்சுவாா்த்தை!

சுருக்கம்

இந்தியா- சீனா தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, ஹைதராபாத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

அணு எரிபொருள் விநியோகிக்கும் குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கு, சீனா முட்டுக்கட்டை போட்டு வருவதால், தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு சுமூகத்தீர்வு காணவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தவும், இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, நவம்பர் முதல் வாரத்தில் ஹைதரபாத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்.எஸ்.ஜி எனும் அணு எரிபொருள் விநியோசகிக்கும் நாடுகளின் குழுவில் இந்தியா இடம்பெறுவது, ஐ.நா.சபையில் ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்கக்கோரும் இந்தியாவின் கோரிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, அப்போது விவாதிக்கப்படவுள்ளன.  

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சி ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூ.30 கோடி மதிப்புள்ள தங்கம்-வைரம் ஜொலிக்கும் ராமர் சிலை… அடையாளம் தெரியாத பக்தர் செய்த தானம்!
பூமியின் எந்த மூலையிலும் இணையம்.. LVM3 ராக்கெட்டில் இமாலய சாதனை படைத்த இஸ்ரோ