‘பாக். அத்துமீறலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

 
Published : Oct 30, 2016, 06:09 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
‘பாக். அத்துமீறலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சுருக்கம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்று வீசி சென்றனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் கூறியதாவது,

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு பாதுகாப்பு படை, ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் இந்தியா எதற்கும் தலைவணங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் தீபாவளியை அமைதியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ராணுவ வீரர்கள் மட்டும் தான் காரணம் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!
அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்!