‘பட்டாசு கடை தீ விபத்தில் 8 பேர் பரிதாப பலி’ ...!! – குஜராத்தில் சோகம்

 
Published : Oct 30, 2016, 05:12 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
‘பட்டாசு கடை தீ விபத்தில் 8 பேர் பரிதாப பலி’ ...!! – குஜராத்தில் சோகம்

சுருக்கம்

குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் பட்டாசுக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி குஜராத் மாநிலம் வதோராவில் உள்ள பட்டசுகடை ஒன்றில் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, பட்டாசுக் கடையில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து அந்தக் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்துசிதறியது. இதனால், அருகில் இருந்த மற்ற பட்டாசுக் கடைகளுக்கும் தீ பரவி அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறின.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை சந்தோசமாக கொண்டாடிவரும் நிலையில், 8 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!
அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்!