
காஷ்மீரில் கலவரத்தை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. ஆனால், பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் புரான் வானி கடந்த ஜூலை 8ம் தேதி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை கண்டித்து பிரிவினைவாதிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில், காஷ்மீர் நோவாட்டா பகுதியில் உள்ள ஜாமியா மசூதி நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பிரிவினைவாதிகள் சமீபத்தில் அறிவித்தனர். இதனல், சட்டம்– ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு காஷ்மீரில் 6 கவால் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதேவேளையில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல், நிலைமையில் சற்று மாற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து, காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. ஆனாலும், பொது மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.