எஸ்பிஜி இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்!

By Manikanda Prabu  |  First Published Sep 6, 2023, 1:41 PM IST

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்


பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 61. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சின்ஹா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

1987 பேட்ச் கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அருண் குமார் சின்ஹா, கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மே மாதம் 31ஆம் தேதி ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், உடல்நலக் கோளாறால் அவர் உயிரிழந்துள்ளார். அருண் குமார் சின்ஹா இதற்கு முன்பு திருவனந்தபுரத்தில் டிசிபி, ரேஞ்ச் ஐஜி, உளவுத்துறை ஐஜி மற்றும் நிர்வாக ஐஜியாக பணியாற்றியுள்ளார்.

Latest Videos

undefined

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!

இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மிக, மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல், பிரதமர், முன்னாள் பிரதமர், அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இதில் திருத்தம் செய்யப்பட்டு, பதவியில் உள்ள பிரதமர்களுக்கு மட்டும் தற்போது சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

click me!