
இரவு நேரப் பயணத்துக்காக சிறப்பு இரட்ைட அடுக்கு(டபுள் டக்கர்) குளிர்சாதன வசதி கொண்ட ‘உதய்’ ரெயிலை ஜூலை மாதம் அறிமுகம் செய்ய ரெயில்வே முடிவு செய்துள்ளது.
மக்கள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களான டெல்லி-லக்னோ தடத்தில் இந்த ரெயில்முதல்கட்டமாக இயக்கப்படும் எனத் தெரிகிறது.
‘உத்கிரிஷ்சித் டபுள் டக்கர் ஏ.சி. யாத்ரி எக்ஸ்பிரஸ்’ என்ற சொல்லின் சுருக்கமே ‘உதய்’எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரெயிலில் படுக்கை வசதிகள் கிடையாது, பயணிகள் வசதியாக அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் சொகுசு இருக்கைகள் இருக்கும். ஒரு பெட்டியில் 120 பயணிகள் அமரலாம், தானியங்கி உணவு வழங்கும் எந்திரங்கள் மூலம் பயணிகள் உணவுகளையும், காபி, தேநீர், குளிர்பானங்களையும் வாங்கி பருகலாம்.
இது குறித்து ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ உதய் எக்ஸ்பிரஸ்ரெயில் முதலில் அதிக மக்கள் பயணிக்கும் வழித்தடமான டெல்லி-லக்னோ தடத்தில் முதலில் இயக்கப்படும். இந்த கட்டணம் 3 அடுக்கு ஏ.சி. கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கும். அதே சமயம், பயணிகளுக்கு அதிகமான, சிறந்த வசதிகள் செய்யப்பட்டு இருக்கும்.
ஒவ்வொரு பெட்டியிலும், பயணிகளுக்கு எல்.சி.டி. திரை, பயணிகள் கேட்க வைபை ஸ்பீக்கர்கள், வை பை வசதி போன்றவைகள் இருக்கும். படுக்கை வசதிகள் இல்லாத இந்த இரண்டு அடுக்குரெயிலில் இரவு நேரத்தில் இயக்கப்படும். பயணிகளுக்கு படுக்கை வசதி இல்லாத போதிலும், வசதியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வசதியாக காலை நீட்டிக் கொள்ளும் வகையில் இட வசதி,நவீன வடிவமைப்பில் வண்ணமயமான பெட்டிகள், பயோ-கழிப்பறைகள் கொண்டதா இருக்கும். மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இந்த ரெயில் செல்லும்’’ எனத் தெரிவித்தார்.