
எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான ‘அட்மிட் கார்டு’ இணையதளத்தில் இன்று வௌியானது. அதை மாணவர்கள் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாடுமுழுவதும் மருத்துவப் படிப்பு மற்றும பல் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வு நாடுமுழுவதும்மே 7-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கான ‘அட்மிட் கார்டு’ என்று அழைக்கப்படும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை சி.பி.எஸ்.சி. நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்யலாம்.
மே7-ந்தேதி நடக்கும் நீட் நுழைவுத் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, ஒரியா, மராத்தி,பெங்காலி, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 10 மொழிகளில் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் www.cbscneet.nic.in என்ற இணைய தள முகவரியில் இருந்து அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.சி அறிவித்து உள்ளது.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
முதலில் அரசின் நீட் 2017ம் ஆண்டு தேர்வு இணையதளமான www.cbscneet.nic.in என்ற தளத்துக்குள் மாணவர்கள் நுழைய வேண்டும். அதில் அட்மிட் கார்டு குறித்த அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கும்.
அதில் உள்ள கட்டங்களில் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர், பதிவு எண், பாதுகாப்பு குறியீடு அகியவற்றை நிரப்பி, அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.